தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது.இதனால் இவரை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் கைகோர்த்து உள்ளார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் உள்ளிட்ட சில பட குழுவினர்கள் ஒன்றிணைந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இயக்குனர் கௌதம் மேனன் அவர்களும் விஜயை வைத்து படம் இயக்குவதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயுடன் சேர்ந்து கௌதம் மேனன் பணியாற்ற இருந்தார் ஆனால் சில காரணங்களினால் அது நடக்காமல் போய்விட்டது மேலும் விஜய் அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் விஜயுடன் கைகோர்க்க அவரால் முடியாமல் இருந்து வருகிறது.
மேலும் அப்படி விஜயை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு காதல் படமாக தான் இருக்கும் என கூறியுள்ளார் மேலும் விஜய் பல ஆண்டு காலங்களாக காதல் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் மேலும் இதன்மூலம் பழைய விஜயை பார்க்கலாம் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள்.