தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் மற்றும் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் என்னை அறிந்தால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்பொழுது மீண்டும் இவர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் அஜித் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் போன்றவை சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் பேங்கில் நடந்த உண்மையான கொள்ளை சம்பவத்தை வைத்து உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடைசி கட்ட பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் அஜித் அடுத்ததாக தன்னுடைய 62ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜித் 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் மேலும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிய வந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது விக்னேஷ் சிவன் தனது நெருங்கிய நண்பர் என்றும் இதுவரை அந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து எதையும் அவர் கூறவில்லை என்றும் ஆனால் இனிமேல் அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு கொண்டால் அந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த விந்து தணிந்தது காடு படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக கௌதம் மேனன் விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைப்போல் காக்க ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார் மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக தயாராக இருக்கிறது.