இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தினை ஐசரி கணேஷ் தயாரிக்க சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று அதிகாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
மேலும் இந்த படத்தில் சிம்பு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் இதற்காக தன்னுடைய அதிக உழைப்பை செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய கடின உழைப்பினால் எப்படி டான் ஆகிறான் என்பதனை மையமாக வைத்து தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது முதல் நாள் முதல் 5 மணி காட்சியை பார்க்க விரும்பும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வரவேண்டும் ஏனென்றால் கதை கதாபாத்திரத்தின் ஓட்டம் செட்டாக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கௌதம் மேனன்.
இப்படிப்பட்ட நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி 4:30 மணிக்கு சில இடங்களில் 5:00 மணிக்கு தொடங்கியது. இப்படிப்பட்ட நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு மூன்றாவது திரைப்படம் எனவே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருவதால் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 600கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து மிகவும் நன்றாக இருப்பதாகவும் சிம்பு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பதால் இவருக்கு கண்டிப்பாக அவார்ட் கிடைக்கும் எனவும் பாசிட்டிவ் கமாண்டுகளை கூறி வருகிறார்கள்.