வேட்டையாடு விளையாடு 2 படத்தின் தகவலை வெளியிட்ட கௌதம் மேனன்.!

vettaiyadu vilayadu
vettaiyadu vilayadu

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக வருகிறார் மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதால் அந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் எப்பொழுது தயாராகும் என வழி மேல் விழி வைத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக உலகநாயகன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் விக்ரம். உலகநாயகன் அவர்கள் சில ஆண்டுகள் அரசியலில் தனது ஆர்வத்தை செலுத்தி வந்த நிலையில் பிறகு டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிசியாக இருந்தவர்.பிறகு விக்ரம் திரைப்படத்தில் நடிக்க துவங்கினார் இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் அவர்கள் இசையமைப்பில் உருவாகி இருந்தது.

மேலும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே இந்த திரைப்படத்தின் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் ஜூன் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது. அந்த வகையில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது இந்த படத்தில் கமலின் கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் செதுக்கி தயாரித்திருந்தார் என்பது ரசிகர்களின் கருத்து.

இப்படிப்பட்ட நிலையில் கமல் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதமேனன் இயக்க இருக்கிறார். தற்போது தகவல் இந்த படத்தினை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2006ஆம் ஆண்டு கௌதமேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு.

இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்க தற்பொழுது கௌதம் மேனன் முடிவெடுத்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது லாக் டவுன் முன்னே கமலை சந்தித்து வேட்டையாடு விளையாடு 2 படத்தின் 45 நிமிட கதையை கூறினேன் கமலுக்கு அது பிடித்துப் போக அந்த கதையை டெவலப் செய்ய சொன்னார்.நான் தற்பொழுது அந்த கதையை முழுவதுமாக எழுதி முடித்துள்ளேன்.

விரைவில் கமலை சந்தித்து இந்த கதையை கூறுவேன் மேலும் அந்த கதை கமலுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். கௌதம் மேனன் இவ்வாறு கூறிய இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.