லியோ படத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார் அது குறித்த கூடுதல் தகவலை பார்க்கலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து உருவாக்கி வரும் திரைப்படம் தான் லியோ இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் இதனை அடுத்து இரண்டாம் கட்ட பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே பட குழு அறிவித்திருந்தது. லியோ படத்தில் விஜய்யடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், எஸ்.ஜே சூர்யா, மன்சூர் அலிகான், பிரபல நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியான், கதிர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ வெளியானது. மேலும் இந்த பாடலில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் பிரபல இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது விக்ரம் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் லியோ படத்தில் ஒப்பந்தமான உடனே எனக் கால் பண்ணி கண்டிப்பா இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் லியோ படபிடிப்பில் தளபதி விஜய் உடன் நடித்தது நல்ல அனுபவமாகவும் சவாலாகவும் இருந்தது.
இந்த படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் தன்னுடைய பேவரட் நாயகி த்ரிஷாவுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தில் நிறைய வசனம் இருக்கு என்றார் மேலும் தன்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருப்பதாக கூறிய கௌதமேனன் லியோ படத்தில் தனது கேரக்டரின் பெயர் தேவில் என தொடங்கும் மற்ற விஷயத்தை நான் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.