ஒவ்வொரு காட்சியும் மிரட்டலா இருக்கு லியோ அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்.! குஷியில் ரசிகர்கள்

Vijay
Vijay

Leo Movie : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ படம்  வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. படத்தில் விஜயுடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன்..

சாண்டி மாஸ்டர், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படம் வெளிவர சில தினங்கள் இருப்பதால் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியிட்டு வந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் கேன்சல் ஆகியது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களை குஷி படுத்த  அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள கௌதம் மேனன் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டனர்.

கௌதம் மேனன் சொன்னது.. லியோ படத்தில் நான் நடித்த காட்சிகளை நான் பார்த்தேன் சிறப்பாக வந்துள்ளது என கூறினார் மேலும் வெகு விரைவிலேயே லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் அவர் பேசி உள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விஜய் உடன் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

சூட்டிங்கின் இடையில் விஜய் உடன் ஒரு மாலைப் பொழுதில் ஐந்து பேர் மட்டும் செலவழித்தோம் அதை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என கூறியுள்ளார். அப்போது ரசிகர்கள்  நீங்கள் விஜய்யை வைத்து யோகன் அதிகாரம் ஒன்று படத்தை குறித்த கேள்வி எழுப்பினர் பதிலளித்த கௌதம் மேனன் அந்த படம் குறித்து விஜய் தான் சொல்ல வேண்டும் ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது என கூறி உள்ளார்.