தளபதி விஜய் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்தநிலையில் கௌதம்மேனன் விஜய்க்கு அருமையான லவ் ஸ்டோரி கதை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் தமிழில் முன்னணி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் அவர்களுக்கான ஸ்க்ரிப்ட் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் அவர்களுக்கு எமோஷனல் கதைகளில் நடிக்க முடியுமெனவும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவருக்கான கதையை அவரிடம் கூறுவேன் எனவும் கவுதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரியை இயக்க வேண்டும் என நீண்ட காலமாக ஆசை இருப்பதாகவும் முழுமையான ஸ்கிரிப்ட் தயாராகிய உடன் விஜய்யை அணுகினால் அது நிச்சயம் பலன் கிடைக்கும் எனவும் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
அதனால் விரைவில் கௌதம் மேனன் விஜய் இணையும் சந்தர்ப்பம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.