நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை நான் இயக்கவில்லை என விளக்கம் அளித்த கௌதம் மேனன்.!

goedham-menon
goedham-menon

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார் அந்த வகையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இதற்கு முன்பு தமிழில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் அந்த திருமண வீடியோவை பிரபல இயக்குனர்கள் கௌதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.மேலும் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்று இருக்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதமேனன் நயன்தாரா திருமண வீடியோவை நான் இயக்கவில்லை என கூறியுள்ளார்.

நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு வருடங்களாக காதலித்து பிறகு கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரெஸ்டாரண்டில் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கோலகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் ரஜினி, சிவகார்த்திகேயன், அட்லி, சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட ஏராளமான பிரபலம் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியிருந்தவர்கள்.

மேலும் இவர்களுடைய திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமையை நெட் பிலிக்ஸ் நிறுவனத்திற்கு நயன்தாரா விற்பனை செய்துவிட்டதாகவும் அந்த திருமண வீடியோவை கௌதம்  மேனன் இயக்குகிறார் எனவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் நயன்தாரா திருமண வீடியோவை நான் இயக்கவில்லை என்றும்,

ஆனால் அதே நேரத்தில் Nayanthara Beyond The Fairytale என்ற டைட்டிலில் நயன்தாரா ஆவண படத்தை தான் இயக்க உள்ளதாகவும், அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறிய வயது புகைப்படங்கள், திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சில விஷயங்கள் மட்டும் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.