சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்துக்கொண்ட கவுதம் கார்த்திக்-மஞ்சுமா மோகன்.! வைரலாகும் திருமண புகைபடம்…

gautham-karthik
gautham-karthik

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என அழைக்கப்பட்டவர் நடிகர் கார்த்தி. இவருடைய மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம், இருட்டு அறையில் முரட்டு குத்து, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகனை நடிகர் கௌதம் கார்த்திக் காதலித்து வருவதாக  தகவல் வெளியாகி இருந்தனர். இவர்கள் இருவரும் தேவராட்டம் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தேவராட்டம் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்த காரணத்தால் தங்களுடைய காதலை இரு வீட்டார்களுக்கும் தெரியப்படுத்தினர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன இவர்களுடைய திருமணம் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வந்தனர்.

அது மட்டுமல்லாமல் இவர்களுடைய திருமண பத்திரிகையும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வகையில் இன்று நடிகர் கௌதம் கார்த்திக்கும்  நடிகை மஞ்சுமா மோகனுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ஏற்கனவே அறிவித்தது போல தங்களுடைய காதல் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இந்த காதல் திருமண ஜோடிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த காதல் ஜோடிகளை சினிமா பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…