நவரச நாயகன் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் “கடல்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், இருட்டு அறையில் முரட்டு குத்து என வித்தியாசமான படங்களை கொடுத்து தன்னை வெளிகாட்டி வருகிறார்.
இப்படி ஓடிக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்தி தற்போது சிம்புவின் “பத்து தல” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் படம் நாளை கோளாக்காலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்தியின் கேரக்டரை பார்க்க பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர் இந்த படத்தை தொடர்ந்து 16 ஆகஸ்ட் 1947 என்னும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்த படமும் வெகு விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பதால் கௌதம் கார்த்தியும் செம சந்தோஷத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் youtube சேனல் நேர்காணல் ஒன்றில் பத்து தல படம் குறித்தும் தனது அனுபவங்களை குறித்தும் பேசினார்.
அப்பொழுது ஆங்கர் வி ஜே பார்வதி உங்கள் மனைவிக்கு வரும் body shaming கிண்டல் கேலி குறித்து ஒரு கணவராக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த கௌதம் கார்த்தி அடுத்தவங்க ஏன் இப்படி யோசிக்கிறாங்கன்னு தெரியல.. நான் இதைப் பற்றி எதுவும் நான் மஞ்சுமாவுக்கு சொல்லத் தேவையே இல்லை ஏனென்றால் மஞ்சுமா மிகவும் தைரியசாலி உடல் பருமன் குறித்த கேலி கிண்டல்களை அவர் எப்பவோ எதிர்கொண்டுவிட்டார்.
அப்படி யாரேனும் சொன்னால்.. பாவம் அவங்களுக்கு கண்ணு தவிர எதுவுமே தெரியல என கூறுவார். ஒரு கட்டத்தில் அதையெல்லாம் தாண்டி அவருக்கு மகிழ்ச்சியான விஷயம் எதுவோ அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நானும் மஞ்சுமா ஆசைப்படும் எதுவாக இருந்தாலும் அவருக்கு செய்து விட வேண்டும் என நினைப்பேன் அதுவே அவங்களுக்கு ஹாப்பி தான் என்றார்.