வெந்து தண்ணிந்தது காடு திரைப்படத்தின் கதையை விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இலை மரக்காயாக கூறிய கௌதம் மேனன்.! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..

venthu-thaninthathu-kaadu
venthu-thaninthathu-kaadu

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று திரையரங்கிற்கு வந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு காலகட்டத்தில் சிம்புவின் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் இருந்து வந்தது ஆனால் சமீப காலமாக சிம்புவிற்கு லக் அடித்து தூக்குகிறது என்றே கூறலாம்.

அந்த லிஸ்டில் தற்பொழுது வெந்து தனிந்தது காடு திரைப்படமும் இணைந்துள்ளது. இதற்கு முன்பு சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது அந்த வகையில் தற்பொழுது மூன்றாவது திரைப்படமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் இணைந்துள்ளது.

இந்த திரைப்படம் தொடங்கிய காலத்தில் இருந்தே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது அதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியானது. மேலும் சிம்புவிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

அந்த திரைப்படத்தில் அஜித்திற்காக ஒரு கேங்ஸ்டர் கதையை சிம்பு பேசியிருப்பார் அந்த வீடியோவில் சிம்பு அவன் எப்படி இதற்குள் வந்தார் அதற்கு அப்புறம் எப்படி டானாகி கடைசியாக பில்லா ஆகிறான் என்பதுதான் கதை என பேசி இருப்பார். இந்த டயலாக் தற்பொழுது வெந்து தணிந்தது காடு திரைப்படத்துடன் ஒத்துப்போவதால் இதனை சிம்பு ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

வெந்த தணிந்தது காடு முதல் பாகம் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில் இரண்டாவது பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய அதிகரித்துள்ளது.