நடிகர் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்தி தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் மக்களுக்கு பிடித்த திரைப்படங்களாக அமைந்தன.
தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுலகில் இப்படி வெற்றியை நோக்கி ஓட ரெடியாக இருந்தாலும் மறுபக்கம் தற்பொழுது கௌதம் கார்த்தி காதலில் விழுந்து உள்ளார் என்ற செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனது திறமையை காட்டி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை மஞ்சிமா மோகனை அவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் கௌதம் கார்த்திக் தேவராட்டம் திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிக்கும்போது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது தற்போது அதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். அன்மையில் மஞ்சிமா மோகன் பிறந்த நாள் வந்தது இதனையடுத்து அவர் வாழ்த்து சொல்லும் பொழுதே அப்படியே காதலிப்பதையும் மறைமுகமாக சொல்லிவிட்டார்.
அவர் சொன்னது : பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன்னை போன்ற வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவைப் போட்டு அசத்தினார். இதை கண்ட ரசிகர்கள் முதலில் மஞ்சுமா மோகனுக்கு வாழ்த்துக்களை சொன்ன நிலையில் நீங்கள் இருவரும் காதலித்து வருகிறீர்கள் அதற்கும் வாழ்த்துகள் என சொல்லி வருகின்றனர்.