IPL மீதி போட்டி நடத்தால் உருளும் கங்குலி தலை.? உண்மையை புட்டு புட்டு சொன்ன BCCI தலைவர்.. ஷாக்கான ரசிகர்கள்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடைபெற்ற 14வது சீசன்  ஆரம்பத்தில் சீரும் சிறப்புமாக அமைந்தாலும் இடையில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் BCCI உடனடியாக போட்டியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இதையடுத்து வீரர்கள் பலரும் தனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்நாட்டு வீரர்கள் கொரோனா பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பிறகு வீட்டிற்கு செல்ல உள்ளனர் இது ஒரு பக்கம் இருக்க. தலைவர் கங்குலி இந்த ஐபிஎல் போட்டியை நடத்தியாக வேண்டும் என்று ஒரு குறிக்கோளுடன் இருக்கிறார்.

அதற்கான காரணத்தையும் தற்பொழுது மனம் திறந்து கூறியுள்ளார் கங்குலி. T20 உலக கோப்பை போட்டி வருவதற்கு முன்பாகவே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிட்டு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2021 மீண்டும் நடக்காவிட்டால் மிகப்பெரிய தொகையை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ மட்டுமின்றி ஸ்டார், ஐபிஎல் அணிகள், பங்குதாரர்கள் உட்பட பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படையாகக் கூறினார். ஒவ்வொரு போட்டியின் அடிப்படையில் நிதி அளித்து வருவதாகவும் ஒரு போட்டிருக்கு 54.4 கோடி ரூபாயை அளிப்பதாகவும் அவர் கூறினார்

மொத்தம் 60 போட்டி இதில் பெரும் 29 போட்டி மட்டுமே தற்போது முடிவடைந்துள்ளது இதுவரை 1577 கோடி ரூபாய் பிசிசிஐ பெற்றுள்ளதாகவும் மீதி 31 போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் 1700 கோடி ரூபாய் பிசிசிஐ பெற முடியாமல் தத்தளிக்கிறது இதேபோல் ஸ்டார்  நிறுவனம் தன்னுடைய விளம்பரதாரர் இடமிருந்து பணத்தை பெற முடியாமல் இருக்கிறது.

மேலும் விவோ டைட்டில்  ஸ்பான்சர் 225 கோடி ரூபாய் கொடுக்க வில்லை மற்ற ஸ்பான்சர் அன் அனாடமி, dream11 உள்பட அனைத்து ஸ்பான்சர் நிறுவனமும் 300 கோடியில் வர வேண்டியது இருக்கிறது ஆனால் தற்பொழுது வரவில்லை என ஓபனாக தெரிவித்தார் மீதி போட்டியை நடத்த வில்லை என்றால் மொத்தம் 2500 கோடி இழப்பு சந்திக்கும் என தெரிவித்தார்.