தலைவி திரைப்படத்தை தொடர்ந்து வரலாற்று திரைப்படத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கும் கங்கானா..! இணையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய அப்டேட்..!

kangana-1

தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் இந்த திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இவர் முழுக்க முழுக்க பாலிவுட் பக்கம் தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தலைவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகும். மேலும் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் பெருமளவு பொருட்செலவு போட்டு எடுக்கப்பட்டது ஆகும்.

இந்நிலையில் இத்திரைப்படமானது சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் வசூலிலும் தோல்வியை தந்துவிட்டது. இந்நிலையில் தன்னுடைய புதிய திரைப்படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் நமது நடிகை.

இந்நிலையில் தலைவி என்ற திரைப்படத்தை தொடர்ந்து சீதா என்ற வரலாற்று திரைப்படத்தில் மறுபடியும் நடிக்க உள்ளாராம்.இவ்வாறு இந்த திரைப்படத்தில் திரைக்கதையை பாகுபலி தலைவி திரைப்படத்தின் கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் அவர்கள் தான் எழுதியுள்ளாராம்.

seetha-1
seetha-1

முதலில் இந்த திரைப்படத்தில் கரீனா கபூர் தான் நடிக்க இருந்தார் ஆனால் இவர் 12 கோடி சம்பளம் கேட்ட ஒரே காரணத்தினால் கங்கானாவை  இத்திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் கலாம். இவர் சமீபத்தில் கதையம்சம் சிறந்த திரைப் படத்தில் மட்டும் நடித்து வரும் நமது நடிகை இத்திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இத் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் ஆகிய பல்வேறு மொழிகளில் வெளியிட போவதாக கூறப்படுகிறது.