Vishal : விநாயகர் சதுர்த்தியை குறி வைத்த விஷால்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்…

mark-antony
mark-antony

Vishal : ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் நகைச்சுவையான திரைப்படங்களை இயக்குவதில் வல்லமை படைத்தவர். அதற்கு எடுத்துக்காட்டாக 2015இல் இவரால் இயக்கப்பட்டு வெளிவந்த அடல்ட் காமெடி திரைப்படமாக “திரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படத்தைக் கூறலாம்.

மேலும் இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் வெர்ஜின் மாப்பிள்ளை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஷால் நடிப்பில்” மார்க் ஆண்டனி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷாலின் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் இடையே ஒரு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர் முதன்முதலாக நடித்த செல்லமே சண்டக்கோழி மற்றும் திமிரு ஆகிய படங்கள் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்துள்ளது. அதுபோல மார்க் ஆண்டனி படமும் வெற்றியை அள்ளித் தருமா என்று இப்படக்கு குழுவினரால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டரை இத்திரைப்படக் குழுவாள் வெளியிடப்பட்டுள்ளது. விஷால் இரட்டை வேடத்தில் இருக்கும் அந்த போஸ்டரில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.