கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் கேப்டனாக இருந்து பல்வேறு வெற்றிகளை குவித்து கொடுத்தவர் விராட் கோலி இருப்பினும் சமீபகாலமாக இவர் நல்ல வெற்றியை கொடுத்திருந்தாலும் பெரிய தொடர்களில் கோப்பையை கைப்பற்ற முடியாமல் நழுவ விட்டுள்ளார்.
மேலும் விராட் கோலியின் ஆட்டமும் பெரிய அளவில் தென்படவில்லை இதனை கருத்தில் கொண்டு முதலில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியிலும் கோலியின் கேப்டன் பதவியை பிடிங்கி ரோகித் இடம் ஒப்படைத்தது.
பிசிசிஐ இதனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் கேப்டனாக செயல்படுகிறார். இது பலருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் இந்த செய்தியை கொடுத்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நீங்கள் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சரியான விஷயம் என ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கம்பீர்.
அவர் பேசியது : டெஸ்ட் அணியை ஒப்பிடும்பொழுது குறுகிய வடிவிலான இந்திய அணி பாதுகாப்பான ஒரு வீரரின் கையில் இருப்பதாக தெரிவித்தார்கள். இரண்டு கேப்டன்கள் இருப்பது நல்ல விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சும்மாவே கோலிக்கும் கம்பிருக்கும் ஆகவே ஆகாது. எப்போதும் சண்டை சச்சரவு இதனால் இருவருக்கும் ஏழாம் பொருத்தம் தான். இப்பொழுது இது வேற சொல்லி உள்ளதால் தற்போது கோலி மற்றும் அவரது ரசிகர்கள் கம்பீர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.