விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் 7 c என்ற தொடர் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் கேப்ரியலா.
இவர் முதன்முதலில் சின்னத்திரையில் அறிமுகமானாலும் வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசன் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் கேப்ரியலா.
அதன்பிறகு சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அப்பா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் ஆகி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் வெறும் ஐந்து லட்ச ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரியலா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.
தற்பொழுது இவர் சமூக வளைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார் அவர் பெரிதாக எந்த ஒரு பட பிடிப்பும் அமையாததால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.
வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரபலமாகி வருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த ஈரமான ரோஜாவே என்ற சீரியளில் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
முதலில் குச்சி ஐஸ் போல் இருந்த கேப்ரில்லா தற்போது நமீதா போல கும்மென்று மாறியுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.