தற்பொழுது சினிமாவில் உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அதோடு குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான பலரும் டீனேஜ் பெண்ணாக மாறி இணையதளத்தை கலக்கி வருகிறார்கள். அந்தவகையில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்து இளசுகள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படம் 3.
இந்த திரைப்படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா. இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனது முத்திரையைப் பதித்தார்.
பிறகு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடர்ந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர்.
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற மாட்டோம் என்பதை அறிந்த கேப்ரில்லா 5 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்து கொண்டு எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு முரட்டு சிங்கிள்ஸ் ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதோடு சில படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததை விட இப்பதான் அழகாயிருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.