G.Marimuthu : தமிழ் சினிமாவில் இருக்கும் திறமையான நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அந்த வகையில் விவேக், மயில்சாமி, மனோபாலா ஆகியவர்களை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து நேற்று மாரடைபால் இயற்கை எழுதினார்.
சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இவர் கண்ணும் கண்ணும் , புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருந்த மாரிமுத்து சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியல் இன்று உச்சத்தில் இருக்க காரணமே மாரிமுத்து தான் அந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் அவ்வளவு சூப்பராக நடித்திருந்தார்.
இந்த சீரியலுக்காக நேற்றைய டப்பிங் பண்ண காலையிலேயே போய் உள்ளார் இரண்டு மணி நேரம் டப்பிங் பேசிவிட்டு வெளியே வந்தவுடன் ஒரு மாதிரியாக இருப்பதாக கூறி வெளியே காற்றோட்டமாக இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார் திடீரென என்ன ஆச்சு என தெரியவில்லை காரை எடுத்துக்கொண்டு இவர் போய்விட்டார்.
அதன் பிறகு தான் இவர் இறந்ததாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. இதை கேள்விப்பட்டால் எதிர்நீச்சல் டீம் மற்றும் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களை அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் twitter பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.
நேற்று அவரது அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று காலை 10 :30 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாரிமுத்து டப்பிங் பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்து கார் எடுத்த அந்த திக் திக் நிமிட வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடக் காட்சிகள்… #Marimuthu #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/lpgKmK56ii
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 8, 2023