காத்து வாக்குல இரண்டு காதல் படத்திற்காக சமந்தா வாங்கிய முழு சம்பளம் இவ்வளவா..

kaathu vaagula rendu kadhal
kaathu vaagula rendu kadhal

அண்மையில் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரது காதலை நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய்சேதுபதியை வைத்து காதல் காமெடி கலந்த வித்தியாசமான திரைப்படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார்.  இந்த படம் வெளிவருவதற்கு முன்பே படத்திலிருந்து டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏனென்றால் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வருவதால் அந்த பெண்களை எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக படமாக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வரும் சமந்தா நயன்தாரா இருவரும் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றாக இணைந்து உள்ளதால் படத்தில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

ஆகையால் படம் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இன்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி படம் சினிமாவில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தார் அவர் தற்போது இந்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதனிடையே புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு கிளாமர் நடனமாடி அந்த பாடலுக்கு மட்டுமே 3 கோடியை சம்பளமாக பெற்றார்

அதிலிருந்து தனது சம்பளத்தை அதிக அளவு உயர்த்திய சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன.