கொரோனா வைரஸினால் உலகமே மிகப்பெரிய அச்சத்தில் இருந்து வருகிறது. சீனாவிலிருந்து பரவி தற்பொழுது பல நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது இதனால் பல லட்சம் பேர் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இந்தியாவிலும் அதன் கோரதாண்டவம் நீடித்து வருகிறது இதனால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டித்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதுவரை 2526 பேர் தோற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் தற்போது ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது அதிலும் குறிப்பாக கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை போன்ற மாவட்டங்களில் அதிகமாக பரவி வருவதால் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நான்கு மாவட்டங்களில் மருந்தகம், பால் கடைகள், அம்மா உணவகம், போன்றவை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது மேலும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.