முன்னணி நடிகர் இருந்தாலும் வெறும் காமெடிக்காக ஓடிய 5 திரைப்படங்கள்.!

movie
movie

சினிமாவில் பொதுவாக கதை நன்றாக இல்லை என்றாலும் நடிகர்களுக்காக, பாடலுக்காக  நன்றாக ஓடிய திரைப்படங்கள் உண்டு. அதேபோல் காமெடிக்காக மட்டும் ஓடிய திரைப்படங்களைதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி :- இந்த திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்திருப்பார். மேலும் இவருடன் சந்தானம், ஹன்சிகா மோட்வானி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சந்தானம் காமெடி வைத்து தான் படமே 150 நாட்களுக்கு மேல் கூறியதாக கூறப்படுகிறது.

வின்னர் :- பிரசாந்த் நடித்த இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததற்கு முழுக்க முழுக்க வடிவேலுவின் காமெடி தான் காரணம். படத்தில் கதை நன்றாக இல்லை என்றாலும் இவருடைய   காமெடியால் படம் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டக்க மண்டக்க :- பார்த்திபன் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் தான் குண்டக மண்டக. இந்த படத்தின் கதை என்றால் பெரிதாக இருக்காது ஆனால் இந்த படத்தில் உள்ள காமெடிக்காகவே படம் திரையரங்கில் அதிக நாட்கள் ஓடியது. இதே கூட்டணியில் உருவான காதல் கிறுக்கன் திரைப்படமும் காமெடிக்காகவே.

மருதமலை:- அர்ஜுன் மற்றும் வடிவேலு காம்போவில் உருவான திரைப்படம் தான் மருதமலை. இந்த படத்தில் ஏட்டு ஏகாம்பரமாக நடித்து அசத்தியுள்ளார் வடிவேலு. இந்த படத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியின் ஒரு பங்கு என்று சொல்லலாம் அந்த அளவிற்கு தனது காமெடியை வெளிப்படுத்தி இருப்பார் வடிவேல் அவர்கள். இதே கூட்டணியில் உருவான கிரி மற்றும் மணிகண்டா படங்களிலும் வடிவேலுவின் காமெடி அள்ளித் தூவி இருப்பார்கள்.

சுந்தரா ட்ராவல்ஸ் :- இந்தப் படம் சிறுவர்களுக்கு அதிகமாக பிடிக்க ஒரே காரணம் முரளி மற்றும் வடிவேலுவின் அசத்தலான காமெடி தான். குறிப்பாக வினைச்சக்கரவர்த்தி வீட்டில் நடக்கின்ற காமெடிகள் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த வண்ணமாக இருந்து வருகிறது.

மேலும் சீனா தானா, தில்லாலங்கடி, சிறுத்தை, பிரன்ஸ், அலெக்ஸ் பாண்டியன், மாப்பிள்ளை, படிக்காதவன், இந்த அனைத்து திரைப்படங்களும் காமெடிக்காக மட்டுமே திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடியது.