திரை உலகில் சாதித்த பல பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்த வருவது திரை உலகிற்கு பெரும் வருத்தத்தை கொடுத்துக் கொண்டு வருகிறது. விவேக் தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் மயில்சாமி இறந்தது தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “தாவணி கனவுகள்” படத்தின் மூலம் தனது திரையை பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு ரஜினி, கமல், அஜித், விஜய், அர்ஜுன், சத்யராஜ் போன்ற பல டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். பின் திரை உலகில் தவிர்க்க முடியாத நாயகன்னாக ஓடிய மயில்சாமி அரசியலிலும் பல பதவிகளில் வகித்தார்.
இதோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவி செய்வது மற்றும் கொரோனா, சுனாமி போன்ற காலகட்டங்களில் பல ஏரியாக்களுக்கு பல உதவிகளை வழங்கி உள்ளார். அதே சமயம் கோவில், குளங்களுக்கும் காசுகளை வழங்கி உள்ளார் சாமி பக்தி அதிகம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதில் எல்லாம் ஆர்வம் இருக்கிறதோ அதில் எல்லாம் இறங்கி போய் வேலை செய்தார்.
இப்படி பயணித்துக் கொண்டிருந்த மயில்சாமி நேற்று மாரடைப்பால் இயற்கை எய்தினார் அவருடைய உடலுக்கு பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் ஒரு சிலர் வரமுடியாத காரணத்தினால் தனது சமூக வலைதள பக்கங்களில் மயில்சாமியின் புகைப்படங்களை வெளியிட்டு தனது அழந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ரஜினி பேசியது என்னவென்றால் என்னுடைய நெருங்கிய நண்பர் மயில்சாமி.. அவர் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற போது எனக்கு மூன்று முறை போன் செய்தார். என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இருந்தேன் அதற்குள் மறைந்து விட்டார் சிவன் கோவிலில் நான் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் என ரஜினி கூறி இருக்கிறார்.