பொதுவாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகுவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் மிகவும் சிறிய, பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களில் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.Bஅந்த வகையில் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 போன்ற ஓட்டிட்டு தலங்களில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் இதோ.
லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் தற்பொழுது உள்ள ஏராளமான இளைஞர்களை கவர்ந்தது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தற்பொழுது வரையிலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் வெளியாகிறது.
குட் பை: அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் நடித்தது அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரைப்படம் தான் குட் பை இந்த திரைப்படம் கலவை விமர்சனத்தை பற்றி நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் வெளியாகிறது.
மான்ஸ்டர்: மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான மான்ஸ்டர். இது மலையாள கிரைம் திரைப்படம் ஆகும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
ஃபெரெடி: பாலிவுட்டில் முன்னணி நடிகரான கார்த்திக் ஆரியன் நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் ஃபெரெடி. இந்த படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இந்தியா லாக்டவுன்: கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுனை மையமாக வைத்து இந்த படத்தின் முழு கதையும் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி அன்று ஜீ 5-யில் வெளியாகிறது.