friendship movie first look : இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா எப்படி பிரபலமடைந்தாரோ அதேபோல் லாஸ்லியாவும் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் அவருக்கு ஆர்மியும் தொடங்கினார்கள் ரசிகர்கள்.
அதைப்போல் பிக்பாஸ் வீட்டில் யார் பிரச்சனைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் நல்ல பிள்ளை என்ற பெயரை எடுத்துவிட்டார் லாஸ்லியா, இந்த நிலையில் கவின் லாஸ்லியா காதல் விவகாரம் விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி பக்கபலமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் கவின் மற்றும் லாஸ்லியா உண்மையாலும் காதலிக்கிறார்களா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் லாஸ்லியாவை வெள்ளி திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள், அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய லாஸ்லியா முதன்முதலில் பிரெண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் கமிட்டானார். இந்த திரைப்படத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தை சென்னையில் ஒரு நாள் அக்னிதேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கத்தில் தயாராகி வருகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த நிலையில் பிரெண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது இதை பார்த்த லாஸ்லியா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து கொண்டாடினார்கள் இந்த நிலையில் பிரெண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.
இதோ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்