ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இதோ படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம்

vijay-suriya
vijay-suriya

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது மிகவும் அரிது அப்படியே இணைந்து நடித்திருந்தால் அது ஆரம்ப காலகட்டத்தில் தன் நடித்திருப்பார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் முன்னணி நடிகராக வலம் வருகிறார்கள் இவர்கள் இணைந்து நடித்தது மிகவும் குறைவான திரைப்படம் தான்.

விஜய் மற்றும் சூர்யா இருவரும் பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்தார்கள் இந்த திரைப்படத்தை இயக்குனர் சிதிக் தான் இயக்கியிருந்தார், படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது படத்தில் வடிவேலு காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் ரமேஷ் கண்ணா தேவயானி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார் அது மட்டுமில்லாமல் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்து இருந்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் சூர்யாவுக்கு ஜோடியாக சுபலட்சுமி தான் நடிக்க இருந்தார், ஆனால் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு சில சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜோதிகா மற்றும் சுப்புலட்சுமி படத்திலிருந்து விலகி விட்டார்கள் அதன்பிறகுதான் தேவயானி விஜயலட்சுமி ஆகியோர்கள் படத்தில் கமிட்டாகி நடித்தார்கள்.

திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் விஜயலக்ஷ்மி நடித்திருந்தால் இன்னும் ஹிட் அடைந்திருக்கும் என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Friends-Movie-Secrets
Friends-Movie-Secrets