கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று லவ் டுடே. இந்த படத்தை இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான படமாக இருந்ததால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தியது.
குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய லவ் டுடே படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி அசத்தியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனரும், நடிகருமான பிரதிப் ரங்கநாதனின் மார்க்கெட் மல மலவென உயர்ந்தது. இதனால் பிரதிப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி பிரதீப் ரங்கநாதன் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.
அதற்கு முன்னதாக மீண்டும் ஒரு நூறு கோடி வசூல் படத்தை கொடுக்க வேண்டும் என மும்பரம் காட்டி வருகிறார் பிரதீப்.. அது என்ன படம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆம் லவ் டுடே படத்தை தயாரித்த அதே நிறுவனத்துடன் உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து உள்ளார். அந்த படத்தை இவரே இயக்கி கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் இன்ஜினியரிங் மாணவர்களின் கஷ்டங்கள், மகிழ்ச்சி போன்றவற்றை படமாக எடுக்க உள்ளனர்.
அதனால் இந்த படமும் கண்டிப்பாக இளைஞர்களை வெகுவாக கவரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் இன்ஜினியரிங் மாணவராக என்ட்ரி கொடுத்து 100 கோடி வசூலை பார்க்க திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த படத்தின் ஸ்கிரிப்டை வேக வேகமாக தயார் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து அடுத்து கோமாளி 2 திரைப்படத்தை இயக்கவும் இருக்கிறார். சமீப காலமாக ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய வெற்றி படம் எதுவும் அமையவில்லை..
அதனால் கோமாளி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சொன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கோமாளி படத்தின் மூலம் தான் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.. இப்படி சினிமா உலகில் இயக்குனராகவும் ஹீரோவாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி டாப் நடிகர்களுக்கே டப் கொடுத்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.