தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் வண்ணத் தொலைக்காட்சியில் படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதி ஆசைப்பட்டார் அது மட்டும் இல்லாமல் பல்வேறு சலுகைகள் பொருட்களை வழங்க வேண்டுமெனவும் அவரின் ஆசையாக இருந்தது.
அந்த வகையில் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும் எனவும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அடுக்கடுக்காக வைத்தார்.
அதேபோல் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது ஆட்சியையும் அமைத்தது ஆட்சியில் அமர்ந்தவுடன் திமுக தலைவர் கருணாநிதி மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கினார் 2006-2011 ஆம் ஆண்டு வீடுதோறும் கலர் டிவி வழங்கப்பட்டது மீதமுள்ள கலர் டிவியை அரசு மருத்துவமனைக்கும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்கு சில அறிக்கைகளை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது இலங்கை தமிழர்களுக்கு கலர் தொலைக்காட்சிகளை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிகளை வழங்கினார் என்று தகவல் கிடைத்துள்ளது.