சினிமா உலகில் எப்பொழுதுமே போட்டிகள் அதிகம் இருக்கும் ஒரு சில நடிகர்கள் வெளிப்படையாக சொல்லுவார்கள் ஒரு சில நடிகர்கள் அதை மறைமுகமாக வைத்துக்கொண்டு படங்களில் மோதுவது வழக்கம் ஆனால் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய போட்டியாளர் விஜய் தான்
அவருக்கும் எனக்கும் சினிமாவில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என வெளிப்படையாக கூறினார். அதற்கு ஏற்றார் போல பல தடவை மோதியுள்ளனர் இருப்பினும் கடந்த எட்டு வருடங்கள் சினிமாவில் மோதாமல் இருந்த வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக வருகின்ற பொங்கலை முன்னிட்டு..
ஜனவரி 11 ஆம் தேதி அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் மோதுகின்றன. இதில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது விஜயின் வாரிசு திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் கலந்த திரைப்படம் ஆக இருக்கிறது.
இரண்டு பேருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் அவர்கள் இருப்பதால் இந்த பொங்கல் யார் கை ஓங்கும் என்பது தெரியவில்லை.. துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும், விஜயின் வாரிசு அதிகாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் பல்வேறு இடங்களில் இரண்டு படத்தின் பிரீ புக்கிங்கும் வேகமாக நடந்து வருகிறது அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் அஜித்தின் துணி 7 கோடியும், விஜயின் வாரிசு 6.9 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் இருப்பதால் ப்ரீ புக்கிங் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.