மகிழ் திருமேனி மிரட்டி விட்ட 5 திரைப்படங்கள்.! தியேட்டரில் அலறவிட்ட கிரைம் திரில்லர்

magizh thirumeni
magizh thirumeni

Director Magizh Thirumeni: இயக்குனர் மகிழ் திருமேனி இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருக்கு ஏராளமான திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் இவர் குறித்த தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மகிழ் திருமேனி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் 5 திரைப்படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்பொழுது 6வது திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பிறகு படங்கள் இயக்கத் தொடங்கிய மகிழ் திருமேனி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகிழ் திருமேனி இயக்கிய 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

முன்தினம் பார்த்தேனே: முன்தினம் பார்த்தேனே படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. காதல் நகைச்சுவை கலந்த படமாக உருவான இப்படத்தின் மூலம் மகிழ் திருமேனி இயக்குனராக அறிமுகமானார். இதில் சஞ்சய், ஏத்கா கோஸ்லா, பூஜா, சாய் பிரசாந்த், சமந்தா, தீபக் தினகர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி போன்றவர்கள் நடித்திருந்தனர்.

தடையறத் தாக்க: 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அருண் விஜய், மம்தா மோகன்தாசு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மீகாமன்: 2014ஆம் ஆண்டு அதிரடி ஆக்சன் படமாக உருவான இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க ஆர்யா மற்றும் ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தடம்: கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தடம் படம் அதிரடி மற்றும் குற்றப் புனைவு படமாக உருவானது. இதில் அருண் விஜய், தன்யா ஹோப் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கலகத் தலைவன்: ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, நிதி அகர்வால் போன்றவர்கள் நடித்திருந்த இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இவ்வாறு இந்த 5 திரைப்படங்களை தொடர்ந்து 6வதாக நடிகர் அஜிதை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி வருகிறார். தற்பொழுது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.