எஸ் ஜே சூர்யாவுடன் கிசுகிசுவில் சிக்கிய நான்கு நடிகைகள்.! 54 வயதிலும் கல்யாணம் ஆகாமல் இருந்ததால் வந்த சிக்கல்…

sj-surya
sj-surya

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு தான் ஒரு நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. கதாநாயகனாக இருந்தும் தன்னால் பெரிய இடத்தை பிடிக்க முடியாமல் போனதால் சினிமாவில் அதற்கப்புறம் நடிக்காமல் இருந்து வந்தார் அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது வில்லனாக தனது சினிமா வாழ்க்கையை மாற்றிகொண்டார். தற்போது வில்லனாக கலக்கி வரும் எஸ் ஜே சூர்யா அவர்கள் தான் நடித்த படங்களில் நான்கு நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தை பற்றி தான் தற்போது நாம் பார்க்க வருகிறோம்.

நிலா :- 2005ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான ஒரு காதல் திரைப்படமான அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நிலா அவர்கள் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எஸ் ஜே சூர்யாவுடன் நிலா அவர்கள் பலமுறை கிசு கிசுக்க பட்டதாக கூறப்படுகிறது.

ரெஜினா :- இயக்குனர் செல்வராகவான் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் ரெஜினா மற்றும் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா மற்றும் ரெஜினா இருவரும் காதல் வளையில் சிக்கிய உள்ளதாக பெரிய அளவில் கிசுகிசுக்க பட்டது.

ப்ரியா பவானி சங்கர் :- நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எஸ் ஜே சூர்யா பிரியா பவானி சங்கரை நிஜமாக காதலிப்பதாக பல தகவல்கள் கிசுகிக்கப்பட்டது.

சிம்ரன்:- எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கிய நடித்த திரைப்படமான நியூ திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் சிம்ரன், கிரண், மற்றும் தேவயானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான போது இந்த படத்தில் நடித்த நடிகை சிம்ரனை எஸ் ஜே சூர்யா அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று பல கிசுகிசு எழுந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடிப்பில் உருவான பல திரைப்படங்களில் அவருடன் நடித்த நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இவர் இப்படி கிசுகிசுவில் சிக்கியதர்க்கு அவர் 54 வயதாகியும் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருப்பது தான் என்று கூறப்படுகிறது.