இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் விக்ரம், பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த திரைப்படம் முதல் நாள் 80 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது நாள் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது . அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் தொடர் விடுமுறை என்பதால் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை தானு அவர்கள் தயாரிக்கவில்லை ஒருவேளை அவர் தயாரித்து இருந்தால் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளே 1800 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று கூறியிருப்பார் என நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
தானு அவர்கள் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தை தயாரித்து இருந்தார் அப்போது கபாலி திரைப்படம் 1000 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னது குறிப்பிடத்தக்கது.
இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவர் தயாரிக்கவில்லை அப்படி தாணு தயாரித்து இருந்தால் எவ்வளவு வசூல் சொல்லி இருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றார்கள்.
இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக மணிரத்தினம் அவர்கள் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.