இந்தியா நியூசிலாந்து இடையிலான T20 தொடரை வென்ற நிலையில் இந்தியஅணி ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் அடித்தது இதைத் அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி மிகப் பெரிய இலக்கான 348 ரன்களை மிக எளிதாக அடித்து வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி மாற்றம் வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
அது என்னவென்றால் இந்திய அணியில் சகல் மற்றும் குல்தீப் யாதவ் இவர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டுமென ஹர்பஜன் கேட்டுள்ளார்.
ஏனென்றால் நியூசிலாந்து அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எளிதில் அணுகுமுறையில் இவர்களது சுழற்பந்து வீச்சில் அவர்கள் தடுமாறுவார்கள் என தெரிவித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் இந்திய அணியில் களம் இறங்கும் பட்சத்தில் எவரேனும் ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெளியேறும் சூழ்நிலை உள்ளது. இவர்கள் இருவரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பதால். நியூசிலாந்தின் மிடில் ஆடர்கள் திணறுவார்கள் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.