நீங்க ஆணிய புடுங்கவேண்டம்.! முன்னாள் வீரர் ஜாகீர்கான் அதிரடி பேச்சு.!

zakir-khan
zakir-khan

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது இந்திய அணி. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வெள்ளை பந்து கிரிக்கெட் அணுகுமுறையும் துவக்க வீரர்கள் பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்திருந்தது.

இந்திய அணியுடன் அரை இறுதி போட்டியில் மோதிய இங்க்லாந்த் அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹலஸ் மிகச் சிறப்பான முறையில் ஆட்டத்தை ஆடி நேர்த்தியான முறையில் வெற்றியை நோக்கி தனது அணியை நகற்றி இருந்தார். ஆனால் இதற்க்கு முன் இவர் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இவர் உலகம் எங்கும் நடக்கும் டி20 தொடர்களில் மட்டும் பங்கேற்று வந்தார். தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் எதிர்பாராத விதமாக ஜானி பேர்ஸ்டோ காயமடைந்த காரணத்தினால் அலெக்ஸ் களம் இறங்கினார். இவர் ஆஸ்திரேலியா டி20 தொடரான பிக் பாஷ் தொடரில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி உதவி செய்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

இவருடைய இந்த கருத்து பல வீரர்களிடம் இந்திய அணியின் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட வேண்டும் என்ற கருத்தை உருவாக்கி இருக்கிறது. இந்தியனின் வீரரான வாஷிம் ஜபார், ரவி சாஸ்திரி, போன்ற வீரர்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த கருத்திருக்கு ஆதரவு கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்தியா அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் ஜாகிர் கான் கூறும்பொழுது இங்கு நிறைய செயல்பாடுகள் உள்ளதாக நான் நினைக்கிறேன் அது மட்டும் இல்லாமல் இது வெறும் உரிமையாளர்கள் டி20 கிடையாது வீரர்கள் விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வெளிநாடு செல்வது முக்கியமான ஒன்றுதான் பிசிசிஐயின் சுற்றுப்பயண விவரங்களை எடுத்துப் பார்த்தால் அது மிக நன்றாக தான் இருக்கும் ஆனால் குறிப்பிட்ட தொடர்களுக்காக வீரர்களை வெளியே சென்று விளையாடுவதற்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.