முக்கிய இடத்தில் வசூலை அள்ள மறந்த “விக்ரம்” திரைப்படம் – எங்கு தெரியுமா.?

vikram
vikram

லோகேஷ் கனகராஜ் கார்த்தி விஜயை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார் அந்த படம்தான் விக்ரம் இந்த படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர் படமும் வேற லெவலில் இருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளது  விக்ரம் படத்திற்கு வலு சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படம் முழுக்க முழுக்க போதை பொருளை தடுப்பது மற்றும் தனது பேரப் பிள்ளையை எப்படி எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் என்பதே படத்தின் கதை மிக நேர்த்தியான முறையில் லோகேஷ் கனகராஜ் எடுத்து அசத்தி உள்ளார் படம் வசூல் ரீதியாக தற்போது அடித்து நொறுக்கி வருகிறது.

முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்த நிலையில் 2-வது நாளில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது படம் வெளிவந்து இரண்டே நாட்களில் மட்டுமே 100 கோடியை வசூல் செய்து ஒரு புதிய சாதனை படைத்துள்ளது விக்ரம் திரைப்படம் வருகிற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி கே ஜி எஃப், RRR படங்களின் வரிசையில் விக்ரம் படம் நிற்கும்  என கூறப்படுகிறது.

இந்த படம் தமிழை தாண்டி ஆந்திரா தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து ஏரியாக்களிலும் வசூலை அள்ளி வந்தாலும் இந்தியில் மட்டும் அல்லாமல் இருந்து வருகிறது விக்ரம் திரைப்படம் ஹிந்தியில் மட்டும் முதல் நாளில் வெறும் 25 லட்சம் அள்ளி உள்ளது. விக்ரம் திரைப்படம் ஹிந்தியில் 1.5 கோடி வசூல் செய்யவில்லை என்றால் அங்கு விநியோகஸ்தர்களுக்கு  மிகப்பெரிய ஒரே நஷ்டத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.