நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கலந்த கமர்சியல் படங்களை கொடுப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இந்த வருடத்தில் மட்டுமே இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்கள் தான். ஆனால் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மட்டும் சுமாராக ஓடி சுமாரான வசூலை பெற்றது.
இது தற்பொழுது சிவகார்த்திகேயனுக்கு பெருத்த அடியை கொடுத்து இருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சத்யராஜ், உக்ரைன் நாட்டு நடிகை மரியா, பிரேம்ஜி, கங்கை அமரன், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருந்தார்.
இந்த படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்தனர். இந்த படத்தின் திரையரங்கு உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் அன்பு செழியன் வாங்கினார். இந்த படம் வெளி வருவதற்கு முன்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை தாறுமாறாக புகழ்ந்தார்.
அன்புச் செழியன் குறிப்பாக மக்களுக்கு பிடித்த ஹீரோ என்றால் முதலில் எம்.ஜி.ஆர் அடுத்ததாக விஜய் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் சொன்னார். இது அஜித் ரசிகர்களை ரொம்பவும் கடுப்பேற்றியது ஏனென்றால் எம்ஜிஆருக்கு அடுத்து மக்களை அதிகம் கவர்ந்து இழுத்தவர் அஜித் தான் ஆனால் அஜித்தின் மீது இருந்த கோவத்தால்..
அவர் அஜித்தை ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்தது சிவகார்த்திகேயன் தான் என்று அந்த மேடையில் புகழ்ந்து பேசினார்.. இந்த சந்தோஷமும் நிலைத்து நிற்கவில்லை பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்து படுமோசமான விமர்சனத்தை பெற்று மண்ணை கப்பியது. இதனால் அன்புச் செழியன்னுக்கு கிட்டத்தட்ட 14 கோடி வரை நஷ்டமாகியது.