வயசான வெளிநாட்டவர்களையும் ஆட்டம் போட வைத்த வாத்தி கம்மிங் பாட்டு.!! அதுவும் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் இப்படி ஒரு ஆட்டமா வைரலாகும் வீடியோ.

Foreigners vaathi coming dance video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் ஊரடங்கு காரணத்தால் படத்தின் ரிலிஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மாஸ்டர் திரைப்படத்திலிருந்து பாடல் மற்றும் போஸ்டர் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் டிக் டாக் செய்து ஆட்டம் ஆடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களும் டிக் டாக் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டில் சோசியல் டிஸ்டன்ஸ் உடன் வயதானவர்கள் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். அந்த வீடியோவை அனைவரும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.