தொழிலாக இருந்தாலும் ,சினிமாவாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு தான் வருகின்றனர் அப்படி தற்போது அதை எல்லாம் தாண்டி மிகப்பெரிய போட்டியாக பார்க்க படுவது அரசியல்.தமிழகத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது அரசியல்தான் 2021 ஆம் ஆண்டு யார் அரசியல் தலைவராக இருக்கப் போகிறார்கள் என்பதை தற்பொழுது மக்கள் பலரும் இதனை எதிர்பார்த்து உள்ளனர்.
தற்போது ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர் இல்லாததால் மிகப்பெரிய வெற்றிடம் மிகப்பெரிய அளவில் இருப்பதால் இதனை நிரப்ப தற்பொழுது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருந்து ஒரு ரஜினி கமல் ஆகியோர் அரசியல் களத்தில் குதித்து தற்போது அதை நிரப்ப முயற்சித்துக் கொண்டு வருகின்றனர் இவர்கள் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்களும் இத்தகைய அரசியல் களத்தில் குதிக்க உள்ளதாக சமீபகாலமாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் தளபதி விஜயின் தந்தையும், இயக்குனருமான ஏஸ். எ.சந்திரசேகர் அவர்கள் மத்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்வது குறித்து டில்லி வழக்கறிஞர் ஒருவர் ஒருவரை கூப்பிட்டு விஜய்யின் அலுவலகத்தில் வைத்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் தளபதி விஜய் அவர்கள் 2021 ஆம் ஆண்டு போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது மேலும் அவரது ரசிகர்கள் இதுதான் சரியான நேரம் என்றும் அவருக்கு ஆதரவாக பல கூக்குரலிடடு வருகின்றனர்.
தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வரும் ரஜினி கமல் ஆகியோர் அரசியலில் இறங்கிய தொடர்ந்து விஜய்யும் இறங்கினார் சிறப்பாக இருக்கும் எனவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
தற்பொழுது நடிகர் விஜய்க்கு மற்றும் எஸ் .ஏ .சந்திரசேகர் ஆகியோருக்கு ஆலோசனை கூறிய வழக்கறிஞர் தான் திரை உலக பிரபலங்கள் பலருக்கு தொடங்கிய புதிய கட்சியை மத்திய தேர்தல் ஆணையத்தில பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் தற்பொழுது அரசியல் கட்சிகளை ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.