90 கால கட்டங்களில் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்தவர் நடிகர் சத்தியராஜ் இப்பொழுது இவருக்கு வயதாகி போனாலும் ஹீரோக்களுக்கு அப்பா சித்தப்பா வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறார். இதனால் இவரது மார்க்கெட் இன்னும் குறையாமலேயே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சத்யராஜ் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ராம நாராயணன் இயக்கத்தில் உருவான படம் சட்டத்தை திருத்துங்கள் இந்த படத்தில் மோகன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சில்கை நடனமாட படக்குழு அணுகி இருந்தது அவருடன் சத்யராஜ் இணைந்து நடனம் ஆடுவதாக கூறப்பட்டது.
குறிப்பிட்ட நாளில் பாடலுக்கான படப்பிடிப்புகள் துவங்கியது சத்யராஜ்க்கு அப்போது சினிமா ஆரம்பகாலம் என்பதால் அவருக்கு சுத்தமாக நடனம் ஆடவே தெரியாதாம் அப்பொழுது ஒரு காட்சியில் சில்க்குடன் இணைந்து ஆடும் பொழுது அவரின் காலை தெரியாமல் மிதித்து விட சில்க் ஸ்மிதா கோபமடைந்து இனி இந்த ஆளுடன் நான் நடிக்க மாட்டேன் என கூறி உள்ளார்.
இதை அறிந்து கொண்ட இயக்குனர் ராமநாராயணன் உடனே வந்து சில்க் ஸ்மிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். சத்யராஜுக்கு நடனமாட தெரியாது இது முதல் தடவை அதனால் தான் இப்படி செய்து விட்டார் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இயக்குனர் கூறி சில்க் ஸ்மிதாவை சமாதானப்படுத்த பிறகு அந்த பாடலில் நடித்தாராம்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதாவும் நடிகர் சத்யராஜூம் நன்கு பேசி பிறகு நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.