நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியைக்கு.. தொகுப்பாளராக கமிட்டாகி உள்ள மற்றொரு பிரபலம்.!! அட சூர்யா கூட இவ்வளவு சம்பளம் வாங்கவில்லையே!! எத்தனை கோடி தெரியுமா?

surya
surya

பொதுவாக வெள்ளித்திரையில் பிரபலமடைந்த நடிகர்-நடிகைகள் சின்னத்திரையில் ஏதாவது ஒரு பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமென்றால் பல கோடி சம்பளம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் சின்னத்திரையில் ஷோக்களை தொகுத்து வழங்கினால் டிஆர்பி பல மடங்கு எகிறி விடும் என்பதால் இதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். பிக்பாஸ் சீசன் 5 வேறு ஒரு தொகுப்பாளர் வழங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கமலஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் எப்படி பிரபலமடைந்துள்ளதோ அதேபோல சூர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இந்நிகழ்ச்சி சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

எனவே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றதால் ஹிந்தி, தெலுங்கு,இந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அந்தவகையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கினார்.இதனைத் தொடர்ந்து  தெலுங்கில் கோடீஸ்வரன் என்று மாற்றி தற்பொழுது வரையிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வகையில் இதுவரையிலும் 4 சீசன் முடிந்த நிலையில் தற்போது 5வது சீசன் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஐந்தாவது சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவர் ரூபாய் ஆயிரம் கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.