நடிகர் தனுஷ் சைலண்டாக இருந்து கொண்டு திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பியது அதனை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் நானே வருவேன்.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து செல்வராகவன், இந்துஜா ரவி, சந்திரன், யோகி பாபு மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இதுவரை இந்த படத்தில் இருந்து போஸ்டர் டீசர் ட்ரெய்லர் பாடல் என அனைத்தும்.. வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என பட குழு சொல்லி வருகிறது.
குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை பார்த்துவிட்டு தனுஷ் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. நிச்சயம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் என சொல்லி உள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் படத்தின் கதை இதுதான் என கூறி ஒரு தகவல் வெளியே கசிந்துள்ளது. அதன்படி பார்க்கையில் கதாநாயகன் பிரபா (தனுஷ்) தன்னோட மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
திடீரென அவருடைய கடந்த கால விஷயங்கள் பிரபுவின் நிம்மதியை கெடுக்கும் வகையில் நடக்கிறது அப்பொழுது நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் கதை தான் நானே வருவேன் படத்தின் கதை என கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.