அண்மை காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டு வந்து நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைக்கின்றன அந்த வகையில் பாகுபலி, RRR ஆகிய படங்களை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தை மணிரத்தினம் இயக்கினார்.
படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார். அதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், விக்ரம், பார்த்திபன், ஜெயராம், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் பிரமித்து போய் படத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர் அதனால் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது அதேசமயம் இந்த படத்தின் வசூலும் பட்டையை கிளப்பி வருகிறது முதல் நாளில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்த அடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் இருந்து வருகின்றன.
நான்கு நாட்கள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்கள் விடுமுறை நாள் என்பதால் இந்த படத்தின் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் அடுத்த வருடம் மே மாதத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது..
இது இப்படி இருக்க பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இருந்து ஒரு சில நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படம் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளிவந்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..