தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக இருந்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சோசியல் மீடியாவின் மூலம் அறிவித்தார்கள் மேலும் இது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ பல சர்ச்சைகள் எழுந்தது. அதாவது அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை சமூக வலைதளத்தின் மூலம் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
இவ்வாறு இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்து இருந்தாலும் வாடகைத் தாய் குறித்த ஏராளமான கேள்விகள் எழுந்தது மேலும் சர்ச்சைக்குரிய ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாக தற்பொழுது இவர்களை இவ்வாறு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என வல்லுநர் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில தத்துவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இதுவரையிலும் இவர்களுடைய தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் கூறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் கூறியுள்ளதாவது எல்லாம் சரியான தருணங்களில் உங்களுக்கு வரும் பொறுமையாய் இரு நன்றி உடன் இரு என பதிவிட்டு உள்ளார்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் விக்னேஷ் சிவன் இவ்வாறு பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்களும் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். மேலும் அவருடைய பதிவில் இந்த ‘உலகத்தை மாற்ற நினைத்தால் வீட்டிற்கு சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த பதிவுகள் அனைத்தும் வாடகை தாய்க்குறித்த சர்ச்சைக்கு மறைமுகமாக அவர் பதில் கூறியுள்ளதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்களுக்கு முன்பே ஏராளமான பிரபலங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கிறார்கள் ஆனால் அவர்களை விட நயன்தாரா, விக்னேஷ் இவனை பற்றி பெரிதாக விமர்சனம் செய்யப்பட்டு வருவது மிகவும் தவறான ஒன்றாக கருதப்படுகிறது.