விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 65 நாட்களைக் கடந்து இருக்கிறது மேலும் இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 11 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் பரீட்சியமான பல முகங்கள் உள்ளது அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ரட்சிதா.
இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்களாகியும் குழந்தை இல்லை எனவே ரட்சிதா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்தார். மேலும் இதனைப் பற்றி பேசிய தினேஷ் என்னை பொருத்தவரைக்கும் எங்கள் இடைவெளியான பிரிவு தற்காலிகமானது தான் மற்றபடி நான் ரக்ஷிதா இருவரும் சட்டபூர்வமாக பிரிவதற்கான ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரையிலும் எடுக்கவில்லை என கூறினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் ரட்சிதாவிற்காக தினேஷ் ஆதரவாக இருந்து வருகிறார் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை கூட தன்னுடைய கணவர் பற்றி ரட்சிதா பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் விக்ரமணியிடம் குழந்தை தத்தெடுப்பது குறித்து பேசி இருக்கிறார்.
அதாவது நான் என்னோட 35 வயதில் தான் ஒரு குழந்தையை தத்தெடுப்பேன் 35 வயது என்ற அளவுகோல் ஏனென்றால் அப்பொழுதுதான் இன்னும் நிறைய கற்றுக் கொண்ட அனுபவம் கிடைக்கும் அதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்கக்கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.
அதற்கு விக்ரமன் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று கேட்க அதற்கு ரட்சிதா பெண் குழந்தை எனக்கு பெண் குழந்தையை தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இவ்வாறு ரட்சிதா மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது போல தெரிவித்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.