திருமணத்திற்கு பிறகும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வரும் நடிகை நயன்தாரா தற்பொழுது மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
மேலும் பாலிவுட்டிலும் தற்பொழுது அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது நடிகை நயன்தாரா கோல்டு, கனெக்ட், இறைவன், லேடி சூப்பர் ஸ்டார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளியாக இருக்கிறது அதாவது அறிமுக இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன் மற்றும் சித்தார்த்த ஆகியோர்களின் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு முதன்முறையாக நயன்தாரா சாக்லேட் பாய் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் இவர்களைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.