சிம்புவுக்கு, எனக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துவரவில்லை – மனம் திறந்த நடிகை தமன்னா.! வேற என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா.?

simbu-and-tamanna
simbu-and-tamanna

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போல  இவரும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு..

சமூக வலைதளப் பக்கங்களில் சரி, பொது இடங்களிலும் சரி ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வலம் வருவதால் நடிகை தமன்னா. பற்றிய பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. நடிகை தமன்னா தமிழில் முதலில் கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அதன் பின் ஒரு கட்டத்தில் இவர் டாப் நடிகர்களுடன் மட்டுமே நடித்தார்.

அந்த வகையில் விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன்,  தனுசுடன் படிக்காதவன் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார். இப்படி இருந்தாலும் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகளும் குவிவதால் அங்கேயே நடிக்கிறார் இதனால் தமிழ் சினிமா பக்கம் வெளி வராமல் இருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து நடிகை தமன்னா பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : நான் சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தேன். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் எடுத்து இருந்தார்.

இந்த திரைப்படத்தில் சிம்பு வயதான ஒரு நபராக நடித்தார் நானும் அந்த வயதான நபரை காதலிப்பது போல் நடித்தேன் அந்த கெமிஸ்ட்ரி அப்போது சொல்லிக்கொள்ளும்படி சரியாக அமையவில்லை. எனவே சிம்புவுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதால் தெரிவித்துள்ளார். ஆனால் தமன்னாவின் ஆசை நிறைவேறுமா என்பது சற்று கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.