இத்தனை வருடங்களாகியும் அஜித்தின் ஒரு திரைப்படத்தைக் கூட காசு கொடுத்து வாங்காத முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்.!அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாமல் போச்சு…

valimai news
valimai news

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக அஜித் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் கடைசியாக தல அஜித்துக்கு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது அத்துடன் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது படத்தில் ஹீமா குரோஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கி  போனிகபூர் தயாரித்துள்ளார். படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை வாங்குவதற்கு முன்னணி தொலைக்காட்சிகள் போட்டி போடுவார்கள் ஏனென்றால் அவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை ஒளிபரப்பினால் டிஆர்பியில் முதலிடம் கிடைக்கும் என்பதற்காகத்தான். அந்தவகையில் சன் தொலைக்காட்சி கடைசியாக விசுவாசம் திரைப்படத்தை வெளியிட்ட டிஆர்பி யல் முதல் இடத்தை பிடித்தது.

அந்தளவு அஜீத்தின் திரைப்படத்திற்கு அதிக மவுசு இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் திரைப்படத்தை வாங்குவதற்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன ஆனால் ஒரே ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் இதுவரை எந்த அஜித் நடித்த  ஒரு திரைப்படத்தையும் வாங்கி ஒளிபரப்பவில்லை என பெரும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அது வேறு எந்த தொலைக்காட்சி நிறுவனமும் கிடையாது ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் விஜய் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை அஜித்தின் ஒரு படத்தை கூட காசு கொடுத்து வாங்கி டிவியில் ஒளிபரப்பியதே கிடையாது இவர்கள் அஜித்தின் திரைப்படத்தை ஒருமுறைகூட ஒளிபரப்பாமல் இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.