நடிகர் சூர்யா அண்மைக்காலமாக பெரிதும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து வருகின்ற நிலையில் தற்போது வாடிவாசல் மற்றும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தநிலையில் அண்மையில் கமலஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம்.
மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தில் கடைசி சில நிமிட காட்சிகளில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து மிரட்டியிருப்பார். அது இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது. மேலும் படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும்படி அமைந்தது.
இதற்காக உலகநாயகன் கமலஹாசன் சூர்யாவை நேரில் சந்தித்து ரோலக்ஸ் வாட்ச் பரிசாக அளித்தார் அதுவும் கமல் தனக்கு நெருக்கமான சொந்த வாச்சை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் விக்ரம் படத்தில் நடித்த சில நிமிட காட்சிக்காக சூர்யா சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் சூர்யா சம்பளம் வாங்காமலே நடித்து இருக்கிறார் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் மாதவன் நடித்து இருக்கும் ராக்கெட்ரி படத்தில்தான் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து சம்பளம் வாங்கவில்லை அதே போல் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஷாருக்கானும் சம்பளம் வாங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
மேலும் சூர்யா மும்பையில் நடந்த ஷூட்டிங்கிற்கு விமான டிக்கெட் கட்டணம் கூட வாங்கவில்லை கேரவன் அஸிஸ்டண்ட் என எதற்காகவும் சூர்யா பணம் வாங்கவில்லை என பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.