திரிஷா, பிரியா ஆனந்தை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்த ஜெயம் ரவி பட நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்

leo
leo

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து உள்ளார். அந்த வகையில் கைதி, மாஸ்டர் படங்கள் வெற்றியை தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படம் எடுத்தார். இந்த படம் 400 கோடிக்கும் மேல் அள்ளி பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. இதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து “லியோ”..

திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  இதுவரை மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தவிர மற்றபடி அனைவரும்  விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் அண்மையில் கூட சஞ்சய் தத் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகிய நிலையில் நேற்று இயக்குனர் லோகேஷ் 37வது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு அசத்தினர். லியோ திரைப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி போன்றவர்களை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகையும் இணைந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வேறு யாரையும் சொல்லவில்லை சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் தாவி தற்பொழுது தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுத்து வெற்றி நடை கண்டு வரும் பிரியா பவானி சங்கர் தான் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை  பிரியா பவானி சங்கர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களை தான் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதை வைத்து பார்த்தாலே பயில்வான் ரங்கநாதன் சொல்வது உண்மை என தெரிய வருகிறது. ஆனால் லியோ படக்குழு சைடுல இருந்து இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை ஆனால் இவர் லியோ படத்தில் இணைந்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.