தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு தமிழ்நாடு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளார்கள் அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் வெளியானால் போதும் வெளிநாடுகளிலும் தியேட்டரில் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.
அந்த வகையில் ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் திரைப்படம் என்றால் அது ரஜினி திரைப்படம் தான் அந்த வகையில் முத்து அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் ஜப்பானில் மாபெரும் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் இன்றும் ரஜினிகாந்திற்கு ஜப்பானில் பல்வேறு ரசிகர்கள் உள்ளார்கள்.
இவ்வாறு ரஜினியை தொடர்ந்து ஜப்பானில் வெளியாகிய ஒரு நடிகர் திரைப்படம் என்றால் அது நடிகர் கார்த்திக் திரைப்படம் தான். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த கைதி என்ற திரைப்படம் மனது மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் கெத்து காட்டியது.
அதுமட்டுமில்லாமல் இந்த கைதி திரைப்படமானது தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து விட்டது மேலும் இத்திரைப்படம் தற்போது ஜப்பானில் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்க உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக தலைவர் ரஜினியின் திரைப்படம் மட்டுமே ஜப்பானில் முன்பு வெளியாகி வந்தது ஆனால் தற்போது அவரை தொடர்ந்து கார்த்திக் திரைப்படம் வெளியாவதன் காரணமாக இத்திரைப்படம் கண்டிப்பாக மாபெரும் ஹிட்டு கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இத்திரைப்படம் மட்டும் ஹிட்டுக் கொடுத்து விட்டால் கண்டிப்பாக கார்த்திக் நடிக்கும் அடுத்த அடுத்த திரைப்படங்களும் ஜப்பான் மொழியில் வெளியாக அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு.